டெல்லி :மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுசார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த வாரத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மருத்துவ படிப்பில், ஓபிசி மாணவர்களுக்கு, இந்த ஆண்டில், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவடைந்து, முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இடஒதுக்கீடு வழங்கும் முடிவை உடனடியாக எடுக்க முடியாது, அப்படி இட ஒதுக்கீடு வழங்கும்நிலையில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும், இதற்காக சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடிய மோடி