மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு - மத்தியப் பிரதேச லாரி விபத்து
11:45 May 16
போபால்: சாகர் மாவட்டத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பண்டா பகுதி அருகே சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட அப்பகுதி காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதையடுத்து காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதும் மகாராஷ்டிராவிலிருந்து உத்தர பிரதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல், இன்று அதிகாலை உத்திர பிரதேசத்தில் ஏற்பட்ட லாரி விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு!