மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 420 இ-மருத்துவமனைகள்(e-Hospitals) நிறுவப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இ-மருத்துவமனை என்பது டிஜிட்டல் இந்தியாவின் ஒரு முயற்சியாகும். இது நாட்டு மக்களுக்கு முக்கிய மருத்துவமனைகளில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதை எளிதாக்கியுள்ளது. தற்போது, மக்கள் ஆன்லைனில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதால், வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. செப்டம்பர் 2015 முதல் தற்போதுவரை 18.37 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவித்தார்.