உத்தர பிரதேசத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் பாஜக இன்னும் வெளியிடாமல் தயக்கம் காட்டி வருகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் வேட்பாளா்களை தேர்வு செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வதுதான் என தகவல் வெளியாகி உள்ளது.
40% மக்களவை உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - வாய்ப்பு
டெல்லி: உத்தர பிரதேசத்தில் பதவியில் இருக்கும் 40% மக்களவை உறுப்பினர்களுக்கு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தலைவா் அமித் ஷாவே தானாக முன் வந்து தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் பயோ-டேட்டாவை வாங்க உள்ளார். பொதுவாக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் பயோ-டேட்டாவை பாஜகவின் மத்திய பாராளுமன்ற குழுதான் வாங்குவார்கள் எனவும், முதன்முறையாக பாஜக வரலாற்றில் கட்சி தலைவரே வாங்குவது புதிது என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும், கட்சி தொண்டா்களை உற்சாகமூட்டும் வகையில் உத்தர பிரதேசத்தில் 40% மக்களவை உறுப்பினா்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்து புதியவா்களுக்கு வாய்ப்பு தர போவதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.