ஸ்ரீநகர்: பிரதமர் சிறப்பு உதவித் திட்டம் மூலம் ஜம்மூ-காஷ்மீர் மாணவர்களுக்கும், லடாக் ஒன்றிய பிரதேச மாணவர்களுக்கும் கல்வியுதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மாணவர்களுக்கான பிரதமரின் சிறப்பு உதவித் தொகைத் திட்டம் குறித்து டெல்லி ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவருடன், உயர்கல்வி ஆணையர் மற்றும் செயலாளர் தலாத் பர்வேஸின் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது ஜம்மு-காஷ்மீர் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையை கல்லூரி இயக்குநர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பாரா மருத்துவம், ஹோட்டல் மேலாண்மைப் பட்டப்படிப்புக்கு ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், பிரதமரின் சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (பி.எம்.எஸ்.எஸ்.எஸ்.) கீழ் இஸ்ரோவில் விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கு ஆறு இடங்களும் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.