தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்! போலீஸ் வலைவீச்சு - Offenders

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில்  உள்ள கனவட்டி சிறையிலிருந்து இன்று காலை தப்பியோடிய நான்கு கைதிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

mp-jail

By

Published : Jun 23, 2019, 1:11 PM IST

மத்தியப் பிரதேசம் மாநிலம் நீமச் மாவட்டத்தில் கனவட்டி சிறைச்சாலை உள்ளது. இங்கிருந்து இன்று அதிகாலை நான்கு குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடிய நால்வரில் இருவர் போதை மருந்து கடத்தல் தொடர்பாகவும் மற்ற இருவர் கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நால்வரும் சிறையின் கம்பியை ரம்பத்தின் உதவியால் அறுத்து, பிறகு கயிறு மூலம் சுவரைத் தாண்டி தப்பியோடியுள்ளனர். காவல் துறையினர் ஒரு ஆப்ரேஷனை திட்டமிட்டு, அதன்மூலம் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிறையிலிருந்து நான்கு குற்றவாளிகள் தப்பியோடிய விவகாரம் காவல் துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details