உத்தரப்பிரதேசம் மயின்புரி மாவட்டத்தில் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த குளிர்சாதன வசதியுடைய பயணிகள் பேருந்து இன்று நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கொழுந்துவிட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுள்ளதாக தெரியவந்துள்ளது.
உத்திரப்பிரதேத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் பலி! - agra
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் குளிர்சாதன பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து தீ பிடித்த விபத்தில் 4 பேர் பலி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர், "நள்ளிரவு ஒரு மணியளவில்பைரோசாபாத்- மயின்புரி எல்லையை நெருங்கிய பேருந்து திடீரென தீப்பிடித்தது. இதில் நான்கு பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்தனர். அதிலிருந்த இரண்டு பயணிகள் மற்றும் ஒரு ஊழியரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதமுள்ள நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் " எனத் தெரிவித்தார்.