புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பத்து கண்ணு கிராமத்தில் தனியார் மதுக்கடை இயங்கி வருகிறது. இக்கடை அருகே நேற்று முன்தினம் (அக்.25) இரவு பைக்கில் சென்ற அடையளம் தெரியாத நபர்கள் சிலர் கடை மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். பிறகு இதுகுறித்து வில்லியனூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திவந்தனர். அதன்படி இவ்வழக்கு தொடர்பாக கூடப்பாக்கம் ரவுடி சார்லி, அவரது கூட்டாளிகளான பிரேம், அணில், சுரேந்திரன் ஆகியோரை காவல் துறையினர் விசாரணை செய்தனர்.