கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுப்போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
விமான சேவைகளும் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டதால் பல்வேறு மாநிலங்களில் தவித்த மக்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துவந்தனர்.
இந்நிலையில், மே 18ஆம் தேதி தொடங்கிய நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக உள்ளூர் விமான சேவைகளும் மே 25ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.