மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த 16ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு மதகுருக்கள் உள்பட மூன்று நபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலை செய்தனர். இந்தக் படுகொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஹன்ஷ்யம் உபாத்யாய் என்ற வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பல்கர் கும்பல் படுகொலை தொடர்பான விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம் செய்யவும் பல்கர் காவல் கண்காணிப்பாளர் மூலம் கும்பல் படுகொலை தொடர்பாக என்ஐஏவுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட சில நாள்களில் பல்கர் மாவட்டத்தில் உள்ள காசா காவல் நிலையத்திலிருந்து 35 காவல் துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பல்கர் கும்பல் வன்முறை: கைதானவர்களின் விவரங்கள் வெளியீடு