ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் ஐ.ஜி அலோக் மிட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 127 பேர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோவையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்த நிலையில், தற்போது 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.