இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகி பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகிறது. இதையடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களை அந்நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிவருகிறது. இந்நிலையில், இதுவரை மூன்றாயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
3,000 ஊழியர்களை அதிரடியாக வெளியேற்றிய மாருதி சுசூகி! - மாருதி சுசூகி
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நஷ்டத்தை சந்தித்துவருவதால் மூன்றாயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறுகையில், "தேவைக்கேற்ப ஊழியர்களை எடுப்பதும் குறைப்பதும் நிறுவனத்தின் நலனைச் சார்ந்த செயல்பாடுகளில் ஒரு பகுதி. ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் நிலைமை நீடித்துக் கொண்டேபோனால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணர்வோம்.
இந்த நிலைமை மாற மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். வருங்காலங்களில் விற்பனை உயரும் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.