பஞ்சாப் மாநிலம் சங்ரூர் நகரத்தைச் சேர்ந்த ஜக்மெயில் சிங் என்ற பட்டியலினத்தவரை உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிறுநீர் குடிக்க வைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஒன்பது நாள்கள் கழித்து அவர் உயிரிழந்தார்.
பஞ்சாபில் தொடரும் சாதிய கொடூரம்: மத்திய அரசு நடவடிக்கை - பஞ்சாபில் தொடரும் சாதிய கொடூரம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பட்டியலினத்தவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
சாதிய கொடூரம்
பின்னர், காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. பாஜக ஆட்சியில், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் நிதி பத்திரத்தில் முறைகேடு? நாடாளுமன்றத்தில் எதிரொலி!