காஷ்மீரில் பட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.எம்) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், விரைந்த காஷ்மீர் காவல் துறை, மத்திய பாதுகாப்புப் படை, ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை ஆகியோர் இணைந்து தீவிரவாதிகளைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கைது! - 3 terrorist belong to Jaish-e-Mohammad gang arrested
ஸ்ரீநகர்: பட்கம் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.எம்) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்,"கைது செய்யப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் இருவரின் பெயர் திலாவர் சோஃபி, சமீர் யூசுப் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபர் 18 வயதுக்குக் கீழ் என்பதால் அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க:'எனக்கு இதை சமைத்து தரியா' - மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!