தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் எரிந்த நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுப்பு - எரிந்த உடல் கண்டெடுப்பு

கொல்கத்தா: தெற்கு தினாஜ்புர் மாவட்டத்தில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலைசெய்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

Gang rape murder
Gang rape murder of Minor in Bengal

By

Published : Jan 8, 2020, 1:48 PM IST

மேற்கு வங்கத்தின் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் குமார்கஞ்ச் பகுதியில் உள்ள பாலத்துக்குக் கீழே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலைசெய்த வழக்கில் மூன்று பேர் நேற்று காவல் துறையினராவல் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் சிறுமியின் காதலன். சிறுமியின் எரிந்த உடல், கடந்த திங்களன்று (06/01/2020) கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல் துறையினர், உள்ளூர்வாசிகள் கூறியதாவது, ”சிறுமியின் காதலன், அவனது நண்பர்கள் இரண்டு பேர் இணைந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலைசெய்து ஆதாரங்களை அழிக்க பெட்ரோல் ஊற்றி சடலத்திற்கு தீ வைத்துள்ளனர்” என்றனர்.

முதற்கட்ட விசாரணையிள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு பலுர்காட் அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் புல்பரி உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சுமி தத்தா, "பள்ளி சார்பாக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அத்தகைய நபர்கள் தண்டிக்கப்படாவிட்டால் சமூகம் திருத்தப்படாது" என்று வெதும்பினார்.

இதையும் படிங்க: தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்!

ABOUT THE AUTHOR

...view details