தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு! - ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி விவசாயிகள் மரணம்

ஜெய்ப்பூர்: ஜல்லூர் மாவட்டத்தில் சுராசந்த் கிராமத்தில், நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று விவசாயிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 3 விவசாயிகள் பலி
ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 3 விவசாயிகள் பலி

By

Published : Sep 16, 2020, 5:13 PM IST

ராஜஸ்தான் ஜல்லூர் மாவட்டத்தில் சுராசந்த் கிராமத்தில் சித்வானா சப் டிவிஷன் புறநகர்ப் பகுதியில் மாலை நேரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.

ஜல்லூர் மாவட்டத்தின் சதுப்பு நிலப்பகுதியின் சூரச்சந்த் கிராமத்தில், நாராயணபுரம் சுராசந்த் எல்லையில் நிலத்தை கடந்து செல்வதற்கு எல்.டி. கோட்டின் கம்பத்தை அவர்கள் உயர்த்தி வைக்க முயற்சி செய்தபோது, மின்சாரம் நிறுத்தி வைக்கப் படாததால் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

இந்நிலையில், உடனடியாக மருத்துவமனைக்குப் கொண்டு சென்ற போதிலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. மின்சாரம் தாக்கியதில் கியா ராம் மெக்வால்ட், குலா ராம் மெக்வாலல் மற்றும் ஃபூரியா ராம் மெக்வாலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராணா ராம் மாலி மற்றும் குமா ராம் மெக்வால்ட் ஆகிய இருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுகஹிராம் பிஷ்னி சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி அளிக்கும் காணொலி

ABOUT THE AUTHOR

...view details