ஜார்க்கண்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினர் பரிமால் நத்வானி, ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரேம் சந்த் குப்தா ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.
மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் - மாநிலங்களவைத் தேர்தல்
ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உட்பட மூன்று பேர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து, ஜார்க்கண்ட், ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 18 மாநிலங்களவை இடங்களுக்கு, மாரச் 26ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக, மாநிலங்களவைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே வருகிற ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷாசதா அன்வர், பாஜக மாநில தலைவர் தீபக் பிரகாஷ் ஆகிய மூவர் மாநிலத்தில் உள்ள இரண்டு இடங்களுக்கு போட்டியிடவுள்ளனர்.