மத்திய ரிசர்வ் காவல் படையில்(சிஆர்பிஎஃப்) நேற்று (ஜூன் 15) மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதுகாப்புப் படையில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 620ஆக அதிகரித்துள்ளது. இதில் 427 பேர் குணமடைந்துள்ளனர், 189 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு கரோனா - டெல்லி மாநிலம்
டெல்லி: மத்திய ரிசர்வ் காவல் படையில் 29 பேருக்கு நேற்று (ஜூன் 15) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக மத்திய ரிசர்வ் காவல் படையில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 18 ஆம் தேதி மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை மருத்துவ அலுவலருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் ஓக்லாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 11,502 கரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,424ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.