தெலங்கானா மாநிலம், சாய்ஃபாத் பகுதியில் உள்ளது கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை. இந்த மருத்துமனையில் இருந்து வெளியூரில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிக்கு விமானம் மூலம் இதயத்தை அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்ததது. ஆனால் மருத்துவமனை இருக்கும் இடத்தில் இருந்து விமான நிலையம் 29 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் போக்குவரத்து துறை உதவியை நாடியது. இதற்கு போக்குவரத்து துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதன்படி இதயம் ஏந்திச் சென்ற ஆம்புலன்ஸ் 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையத்துக்கு, 22 நிமிடங்களில் சென்றடைந்தது. இதுகுறித்து தெலங்கானா போக்குவரத்து காவல் ஆணையர் அனில் குமார் கூறுகையில்,
இதயத்தோடு விரைந்த ஆம்புலன்ஸ்! - 29 கி.மீ தொலைவை 22 நிமிடங்களில் கடந்தது! - 29kms
ஹைத்ரபாத்: இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயத்தை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று, 29 கிலோமீட்டரை வெறும் 22 நிமிடங்களில் கடந்து சென்றது.
'சாய்ஃபாத் பகுதியில் அமைந்துள்ள குளோபல் இன்டர்நேஷ்னல் மருத்துவமையில் இருந்து விமான நிலையத்திற்கு அவசரமாக இதயம் கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர். அதன்படி போக்குவரத்து ஃப்ரீ சாலையை உருவாக்க முடிவு செய்து நேற்று பிற்பகல் 12.37 மணிக்கு சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இந்த ஆம்புலன்ஸானது சரியாக பிற்பகல் 12.59 மணிக்கு ராஜீவ்காந்தி சர்வதே விமான நிலையத்தை அடைந்தது. அதாவது சுமார் 22 நிமிடங்களில் இந்த தூரத்தை ஆம்புலன்ஸ் ஒட்டுநர் கடந்தார். இதற்காக போக்குவரத்து காவல்துறையினருக்கும், ஆம்புலன்ஸ் ஒட்டுநருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.