ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் குல்காம் மாவட்டத்தில் மத்திய ஆயுதக் காவல் படை அலுவலர்களுக்கு புதன்கிழமை (ஜூன் 10) கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர், "ஜூன் 6ஆம் தேதி 90ஆவது பட்டாலியனில் 44 வயதான முதன்மைக் காவலர் ஒருவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
அதன் காரணமாக 90ஆவது பட்டாலியன் பிரிவிலிருந்து 75 அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளில் 28 அலுவலர்களுக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.