கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. கையில் பணமின்றி சாலை வழியாக நடை பயணமாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினர்.
இதையடுத்து வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரையும் மீட்க மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நேற்று வரை சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், ''மே 10ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சத்தீஸ்கருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, 15 சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதுவரை சொந்த ஊர் அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்ட இணையதளத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 867 புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 2 லட்சத்து 73 ஆயிரத்து 935 பேர் பதிவு செய்துள்ளனர்.