இமாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் பகுதியிலுள்ள மண்டியாலி கிராமத்தில் நைனா தேவி கோயிலில் பிரார்த்தனை செய்ய பஞ்சாபிலிருந்து 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் லாரியில் வந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து 21 பக்தர்கள் காயம் - லாரி
சிம்லா: பிலாஸ்பூர் அருகே நைனா தேவி கோயிலில் பிரார்த்தனை செய்ய வந்தவர்களின் லாரி கவிழ்ந்து 21 பக்தர்கள் காயமடைந்தனர்.
பக்தர்கள் 21 பேர் காயம்
இந்நிலையில், இவர்கள் வந்த லாரி திடீரென்று அதன் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையை ஒட்டிய மலையில் மோதியுள்ளது. இச்சம்பவத்தில் லாரி கவிழ்ந்து 21 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதியில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.