நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் வேலுார் மக்களவைத் தொகுதியைத் தவிர்த்து 542 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! - vote counting begins
2019-05-23 07:55:04
17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இதனிடையே, ஆந்திரப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும். அதேபோல், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுள் நீடிக்குமா? என்பதும் இன்றே தெரிந்துவிடும்.
மக்களவைத் தேர்தலைக் காட்டிலும், 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளை அறிய தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.