தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனுவிற்கு இன்று நண்பகல் தீர்ப்பு! - nirpaya rape case

டெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளியான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவிற்கான தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் வெளியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கு தீர்ப்பு  நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தீர்ப்பு  நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  nirpaya rape case  2012 Delhi gang rape case Supreme Court
நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனுவிற்கு இன்று நண்பகல் தீர்ப்பு

By

Published : Dec 18, 2019, 12:20 PM IST

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில், அக்‌ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இச்சூழலில், அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த சீராய்வு மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெறவிருந்த நிலையில், நீதிபதி பாப்டே இவ்வழக்கில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து இந்த மனுவின் மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் தெரிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details