டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் டெல்லியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 412ஆக உள்ளது. இதன் மூலம், இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 165ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 421 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு! - 2 ஆயிரம் படுக்கைகள்
டெல்லி: கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் புதிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, கரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. ஆனாலும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும், டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. லேசான அறிகுறிகளுடன்தான் பாதிப்பு பதிவாகியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.
கரோனா பாதிக்கப்பட்டவருக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதும், அவரை குணமடைந்த பின்னர் வீட்டில் கொண்டு விடுவதும் மருத்துவமனைகளின் கடமை. கரோனா உறுதியான நபருக்கு சிகிச்சையளிக்க மறுத்த தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் புதிய படுக்கைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் லாக்டவுன் யுக்தி தோல்வி - ராகுல் காந்தி