தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வறுமையிலும் எவரெஸ்டில் ஏறி தெலங்கானா இளைஞர் சாதனை! - 20-year-old Telangana Man

ஹைதரபாத்: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 20வயது இளைஞர், கடும் பொருளாதார சூழ்நிலையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.

அமோக் துக்கராம்

By

Published : May 26, 2019, 11:47 PM IST

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், இப்ராஹிம் பட்டனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமோக் துக்கராம். சிறுவயதில் இருந்து மலையேற்றம் மீது ஆர்வம் கொண்ட அவர், தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அமோக் துக்கராம் கூறுகையில், "மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த எனக்கு 17வது வயதில் இருந்து மலையேற்றம் மீது ஆர்வம். அதற்காக பல பயிற்சிகளை செய்ததாலும், போதிய பொருளாதார வசதியில்லாததால், மலையேறுவது தடைப்பட்டு கொண்டே இருந்தது. எனது ஆர்வத்தை பார்த்து ராஜகோன்டா காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத், சுற்றுலாத் துறை ஆணையர் சுனிதா பகவத், வனத்துறை அலுவலர் ராமசந்துரு தேஜ்வாத் ஆகியோர் செய்த உதவி மற்றும் ஆதரவினால் இதற்கு முன்பு ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்ஜாரோவில் ஏறினேன்.

அவர்கள் தொடர்ந்து கொடுத்த ஊக்கத்தினால் தற்போது இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளேன். அடுத்ததாக ஏழு கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான மலையில் ஏறுவதுதான் எனது லட்சியம். மோசமான வானிலை காரணமாக எனது குழுவில் பயணித்த இருவர் என் கண்முன்னே இறந்தது வருத்ததை ஏற்படுத்தியது. இருந்தாலும் விடாமுயற்சி காரணமாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details