இந்தியா முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், சாமானியன் முதற்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் வரை தனது கோர முகத்தைக் கரோனா காட்டிவருகிறது. தமிழ்நாட்டில் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில் உத்தரப்பிரதேச மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங்குக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் சிகிச்சைக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.