தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டடத் தொழிலாளிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி! - சுவர் இடிந்ததால் இருவர் பலி

மங்களூர்: கட்டிடத் தொழிலாளிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

By

Published : Feb 28, 2020, 10:42 PM IST

கர்நாடக மாநிலம், மங்களூர் கரங்கல்பாடி பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்ட மூவர் மீது எதிர்பாராத விதமாக, சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை ஆகியவற்றிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், படுகாயமடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹனீஃபுல்லாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்ரிக்குல், பாகல்கோட்டைச் சேர்ந்த பீமேஷ் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இதனிடையே, மங்களூர் எம்.எல்.ஏ வேதவ்யாஸ் காமத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

இதையும் படிங்க:'கருத்து திருட்டு வழக்கில் பிரசாந்த் கிஷோர் மன்னிப்புக் கேட்டால் அவரை மன்னிப்பேன்'

ABOUT THE AUTHOR

...view details