நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்து 645 நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 201 பேர் கரோனா பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கோவிட் - 19 நிலவரம்:
இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே நான்கு லட்சத்து 50 ஆயிரத்து 284 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 335 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 999 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 20ஆவது நாளாக நாட்டில் கோவிட்-19ன் தற்போதைய பாதிப்பு(Active cases) எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.