யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு 17 பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பட்டியலினத்தில் சேர்த்துள்ளது. இதுகுறித்து அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி கூறுகையில், "17 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பட்டியிலினத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் உத்தரப் பிரதேச அரசு செய்யப்போவதில்லை. இது அவர்களை ஏமாற்றும் செயலாகும். எந்த ஒரு மாநில அரசுக்கும் இந்த விவகாரத்தில் உரிமையில்லை.
பட்டியலினத்தின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: மாயாவதி! - பிற்படுத்தப்பட்ட சமூகம்
லக்னோ: 17 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பட்டியிலினத்தின் இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மாயாவதி
2007ஆம் ஆண்டே 17 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பட்டியிலினத்தில் சேர்க்கப்பட்டு, இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் செவி சாய்க்கவில்லை, இப்போதைய பாஜக அரசும் கேட்கவில்லை" என்றார்.