தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் 10ஆம் வகுப்பு மாணவன் கொலை - இருவர் கைது! - கேரளா கொலை

கேரளா: பத்தனம்திட்டா அருகே 10ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த சக மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

murder  classmates  school  Kerala murder  Pathanamthitta district murder story  student death in kerala  10 ஆம் வகுப்பு மாணவன் கொலை  கேரளா கொலை  கொலை
student death in kerala

By

Published : Apr 22, 2020, 1:07 PM IST

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அங்கடிகல் கிராமத்தைச் சேர்ந்தவர் நிகில் (16). இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நிகிலுக்கும் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

வழக்கம்போல், நேற்று (ஏப்ரல் 21) பள்ளிக்குச் சென்ற நிகிலுடன், சக மாணவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சராமரியாகத் தாக்கினர். அதில், பலத்த காயமடைந்த நிகில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த மாணவர்கள் இருவரும், உடலை யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் புதைக்க திட்டமிட்டு நிகிலை தூக்கிச் சென்றனர்.

இதைக் கண்ட அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நிகிலின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த இரண்டு மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 10ஆம் படிக்கும் மாணவனை சக மாணவர்கள் இருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: கஞ்சா விற்ற காவலர் கைது!

ABOUT THE AUTHOR

...view details