தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர்: நடப்பாண்டில் மட்டும் 156 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - லஷ்கர்-இ-தொய்பா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடப்பாண்டில் மட்டும் 156 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் என கூறப்படுகிறது.

156-terrorists-killed-in-jammu-and-kashmir-this-year
156-terrorists-killed-in-jammu-and-kashmir-this-year

By

Published : Aug 30, 2020, 4:15 PM IST

நேற்று (ஆகஸ்ட் 29) இரவு ஸ்ரீநகரில் உள்ள பாந்தா சௌக்கில் ஏற்பட்ட மோதலில் மூன்று உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் நடப்பாண்டில் 156 பயங்கரவாதிகள் வெவ்வேறு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 152ஆக இருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீநகரில் நடைபெற்றுவரும் மோதலில், நேற்று இரவு மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது ஒரு காவலர் உயிரிழந்தார். இந்த தாக்குதல் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28), ஷோபியனின் கிலூரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் ஒரு பயங்கரவாதி பிடிபட்டார் என்று காஷ்மீர் காவல் ஆய்வாளர் (ஐஜிபி) விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details