கரோனா காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் விரிவான விவரத்தை நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பேசுகையில், "சுகாதாரம் மாநிலப் பட்டியலில் உள்ள நிலையில், அனைத்து விவரங்களையும் மாநில அரசு தயாரித்து, அதை கவனித்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் 155 சுகாதாரத்துறை ஊழியர்கள் உயிரிழந்தனர். இதில் 64 மருத்துவர்களும் அடக்கம்.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் எட்டு மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் ஆறு மருத்துவர்களும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 5 மருத்துவர்களும் உயிரிழந்தனர். மத்திய அரசு சார்பில் இவர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.