தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தனக்கு திருமணம் வேண்டாம்' - 15 வயது சிறுமி முதலமைச்சரிடம் மனு! - குழந்தைத் திருமணம் வேண்டாம்

ஜெய்ப்பூர்: தனக்கு நடைபெறவிருக்கும் குழந்தைத் திருமணத்தில் இருந்து காப்பாற்றக்கோரி, 15 வயது சிறுமி ஒருவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

child marriage

By

Published : Oct 22, 2019, 9:39 AM IST

குழந்தைத் திருமணத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் அவை அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அவர்களது கனவை பல பெற்றோர்கள் அழித்து வருகின்றனர்.

அதற்கு மீண்டும் உதாரணமாகியுள்ளது, ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஓர் சம்பவம்.

ஜெய்ப்பூரில் உள்ள டோங் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவருக்குத் தாய் சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டார். தந்தையின் பாதுகாப்பிலேயே வளர்ந்து வரும் அவருக்கு, திடீரென்று தந்தை திருமண ஏற்பாடுகளை செய்ய முடிவெடுத்துள்ளார். அதனை எதிர்த்து தனக்கு இத்திருமணம் வேண்டாம் என்று மனு அளித்துள்ளார்.

பின்னர் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். "தான் படிக்க வேண்டும், தனக்கு நிறைய கனவு இருக்கிறது. இத்திருமணம் வேண்டாம்" என்று அச்சிறுமி அதில் கூறியுள்ளார். அதனையடுத்து முதலமைச்சர் "இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் படிப்புக்குத் தேவையான அனைத்தையும் அரசு செய்து கொடுக்கும்" என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் உள்பட 7 பேர் மீது போக்சோ...!

ABOUT THE AUTHOR

...view details