அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா குறிப்பிட்டுள்ளார்.
2 மாதத்தில் 15 லட்சம் பயணிகள் வருகை; கண்காணிப்பில் ஓட்டை - மத்திய அமைச்சரவை செயலாளர் - கோவிட் 19
டெல்லி: கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பதாகவும், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை நம் தடுப்பு நடவடிக்கைகக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மத்திய அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
15 lakh international arrivals in 2 months; gap in actual monitoring: Cab Secy
மேலும் அதில், இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.