இதுகுறித்துப் பேசியுள்ள அவர், ”கரோனாவால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் 17 பேர், ஜிப்மரில் இரண்டு பேர் என மொத்தம் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாநில சுகாதாரத் துறைக்கு மிகவும் கடினமான நேரமாகும். மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்ததை அடுத்து வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஊர் திரும்புகின்றனர்.
இனிதான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு வருபவர்கள் விமான நிலைய சோதனையில் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டு, புதுச்சேரி வந்தபிறகு அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. எனவே வெளிநாடுகள் மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களிலிருந்து புதுச்சேரி வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.