தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூரத்தில் 138 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 138 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

138 child labourers rescued from Surat by Raj-Guj teams
138 child labourers rescued from Surat by Raj-Guj teams

By

Published : Dec 29, 2019, 10:54 PM IST

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள துணிக்கடை, உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கூலி வேலைகள் செய்த குழந்தைத் தொழிலாளர்கள் 138 பேரை ராஜஸ்தான்- குஜராத் காவலர்களின் கூட்டு நடவடிக்கையின்பேரில் மீட்டனர்.

இவர்களை மீட்க நோபல் வெற்றியாளர் கைலாஷ் சத்யார்த்தியின் தொண்டு நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்தது. 138 குழந்தைத் தொழிலாளர்களும் 14 முதல் 16 வயது கொண்டவர்கள். இவர்களில் 128 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

மீதமுள்ளவர்கள் ஜார்கண்ட், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக 12 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: தேவாலயத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தேன்மொழி எனப்பெயர் சூட்டிய கலெக்டர்!

ABOUT THE AUTHOR

...view details