டிக்டாக் செயலியால் இதுவரை பல பரிதாபங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் டிக்டாக் காணொலி எடுக்க முயன்றுள்ளான். அப்போது கத்தியை எடுத்து தன்னைத்தானே தவறுதலாக அறுத்துக்கொண்டு, கழிவறையில் தூக்கில் தொங்கியுள்ளான்.
'டிக்டாக்' செய்யும்போது சிறுவனுக்கு நேர்ந்த கதி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவன் டிக்டாக் காணொலி எடுக்கும்போது சவாலாக தன்னைத்தானே அறுத்துக்கொண்டு, தூக்குபோட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
rajasthan
கழிவறைக்குச் சென்று சிறுவனை பார்த்தபோது பெண் போல் பொட்டுவைத்து, தாலி அணிந்துள்ளதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், "டிக்டாக் செயலி இல்லாமல் இருந்தால் என் மகன் உயிரோடு இருந்திருப்பான்" என்றார். சிறுவன் இறந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.