தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அக்டோபரில் 12.44 லட்சம் வேலைகள் உருவாக்கம் - இஎஸ்ஐசி தகவல்

டெல்லி: அக்டோபர் மாதத்தில் மட்டும் 12 லட்சத்து 44 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் காப்பீட்டு கழகம் ( இஎஸ்ஐசி ) தரகவுகள் தெரிவிக்கின்றன.

job creation ESIC
job creation ESIC

By

Published : Dec 24, 2019, 6:11 PM IST

பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் சூழலில், அக்டோபர் மாதம் மட்டும் 12 லட்சத்து 44 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெழிலாளர் காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐசி) வெளியிட்டுள்ள தகரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், 2018-19 வர்த்தக ஆண்டில் மொத்தம் ஒரு கோடியே 49 ஆயிரம் சம்பளதாரர்கள் தொழிலாளர் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளாக இணைந்தனர் என தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistics Officer ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று, தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் சந்தாதாரராக செப்டம்பர் மாதம் 9 லட்சத்து 84 ஆயிரம் தொழிலாளர்களும், அக்டோபர் மாதம் 7 லட்சத்து 39 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விமர்சகர்களை அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என்பதா? ரகுராம் ராஜன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details