காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே வசித்து வரும் யாஸ்மீனா என்ற 11 வயது சிறுமி, பாம்பு கடித்ததால் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாக சிகிச்சை வழங்கியது.
11 வயது சிறுமிக்கு பாம்பு கடி; உயிர் பிழைக்க வைத்த ராணுவ மருத்துவமனை - ஸ்ரீநகரில் பாம்பு கடித்ததால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி
காஷ்மீர்: ஸ்ரீநகரில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.
ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மீனா
அதன் பலனாக அந்த சிறுமி உயிர் பிழைத்தார். இதையடுத்து, மூன்று நாட்கள் கண்காணிப்புக்கு பின்னர், அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றலாம் என அம்மருத்துவமனை அலுவலர் பி.சி. நம்பியார் கூறினார்.