தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மது பாட்டில்கள் ஏற்றி வந்த 11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைப்பு - covid-19 lockdown

புதுச்சேரி: கோவாவிலிருந்து மது பாட்டில்கள் ஏற்றி வந்த 11 லாரிகள் அனுமதி காலம் முடிந்து விட்டதால் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைப்பு11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைப்பு
11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைப்பு

By

Published : Apr 26, 2020, 12:30 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து பலர் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

11 லாரிகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைப்பு

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி வழக்கம் போல் கோவாவிலிருந்து புதுச்சேரிக்கு தலா ஒரு லாரியில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களுடன் 11 லாரிகளில் மதுபான பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகள் கர்நாடக எல்லையை கடந்து தமிழ்நாட்டின் ஓசூர் வந்தபோது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் லாரிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

அதையடுத்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 11 லாரிகளும் புதுச்சேரி எல்லை கோரிமேடு அருகே வந்தடைந்தன. மதுபானம் ஏற்றி வருவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், மீண்டும் அனுமதி வாங்குவதற்காக லாரி ஓட்டுநர்கள் கோரிமேடு எல்லையில் காத்திருத்திருக்கின்றனர். இதற்கிடையே அந்த லாரி ஓட்டுநர்கள், கிளினர்கள் உள்ளிட்ட14 பேர் அடிப்படை வசதி, உணவின்றி தவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அனுமதி பெறும் வரை அவர்கள் மதுபாட்டில்களை பாதுகாப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் மீண்டும் தலைதூக்கும் கரோனா

ABOUT THE AUTHOR

...view details