தெலங்கானா மாநிலம், வானாபார்த்தி மாவட்டத்தில் உள்ள வீப்பன்காண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த அசோக் - அன்னபூர்ணா தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களாக அவர்களின் குழந்தை சரியாக நடக்க முடியாமலும், உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளான். மேலும், அக்குழந்தையை குளிப்பாட்டும்போது அவனது உடம்பில் இருந்து ஊசியும் வெளியே வந்துள்ளது.
குழந்தையின் உடம்பில் ஊசிகள் - இருவர் மீது வழக்குப்பதிவு
ஹைதராபாத்: மூன்று வயது குழந்தையின் உடம்பில் 11 ஊசிகள் இருந்தது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் அளித்தப் புகாரின்பேரில் இரண்டு பேர் மீது தெலங்கானா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது குழந்தையின் உடம்பில் 11 ஊசிகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் சில சிறுநீரகம், இடுப்பு ஆகியப் பகுதிகளில் இருந்தது. பின்னர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசிகள் அகற்றப்பட்டன. எனினும், குழந்தையின் உடம்பிலிருந்து இன்னும் மூன்று ஊசிகள் மட்டும் எடுக்கப்படாமல் உள்ளது. அந்த ஊசிகள் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இருப்பதால் அவற்றை எடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே குழந்தையின் பெற்றோர் அளித்தப் புகாரின்பேரில், இது தொடர்பாக இரண்டு நபர்கள் மீது தெலங்கானா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் கிராமப்புறங்களில் மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதுண்டு என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.