டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் 11ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட 11 சுயேச்சை வேட்பாளர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். பட்டேல், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.