டெல்லியில் கொசுவிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அனைவரும் கொசுவிற்கு எதிரான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். முதலில் அவரது வீட்டிலிருந்து தொடங்கி வைத்த விழிப்புணர்வை, பின் கட்சியில் இருக்கும் சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் விழிப்புணர்வைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
'10 வாரம், 10 மணி, 10 நிமிடம்' - கொசுவுக்கு எதிராக கேஜ்ரிவால் விழிப்புணர்வு! - arvind kejriwal
டெல்லி: கொசுவிற்கு எதிரான விழிப்புணர்வை மாநிலம் முழுவதும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், '10 வாரம், 10 மணி, 10 நிமிடம்' என்ற விழிப்புணர்வை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொசுவினால் பரவும் சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள், 10 நிமிடம் விழிப்புணர்விற்காக ஒதுக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு 10 வாரங்களுக்கு, அதாவது நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும். வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுபுறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.