தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மூ காஷ்மீரில் தொடங்கிய பாரத் ஜோடா யாத்ரா

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை முக்கிய தலைவர்களுடன் இன்று தொடங்கியது.

ஜம்மூ காஷ்மீரில் துவங்கிய பாரத் ஜோடா யாத்ரா..
ஜம்மூ காஷ்மீரில் துவங்கிய பாரத் ஜோடா யாத்ரா..

By

Published : Jan 20, 2023, 12:12 PM IST

கத்துவா: ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் இருந்து இன்று (ஜனவரி 20) காலை தொடங்கியது. இந்த யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி 125 நாட்களைக் கடந்துள்ளது. இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி வெள்ளை நிற டி-சர்ட் மட்டுமே அணிந்திருந்திருந்தார். தற்போது ராகுல் காந்தி குளிரை சமாளிக்க ஜாக்கெட் அணிந்து காணப்பட்டார்.

இந்த யாத்திரையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ரவத் மற்றும் உள்ளூர் தலைவர்கள் ராகுல் காந்தி உடன் அணிவகுத்து சென்றனர். ஜனவரி 26ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்த பின் இந்த யாத்திரை நிறைவடைகிறது.

முன்னதாக ராகுல் காந்தியை லகான்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வரவேற்றனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “எனது குடும்பத்தினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள், இன்று நான் என் வீட்டுக்கு வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் படும் வேதனையை புரிந்து கொண்டு, உங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். பாரத் ஜோடோ யாத்ரா அன்பையும், கருணையையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

பின்னர் பேசிய ஃபரூக் அப்துல்லா, "பல ஆண்டுகளுக்கு முன்பு, சங்கராச்சாரியார் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டார். இன்று நீங்கள் அதைச் செய்கிறீர்கள்" என்று ராகுல் காந்தியை சங்கராச்சாரியார் உடன் ஒப்பிட்டு பேசினார். இன்றைய இந்தியா ராமரின் பாரதம் அல்லது காந்தியின் ஹிந்துஸ்தானம் அல்ல. நாம் ஒற்றுமையாக இருந்தால், இந்த மத வெறுப்பை வெல்ல முடியும்” என்றார்.

இதையும் படிங்க: கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு

ABOUT THE AUTHOR

...view details