தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் - பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்ட்ராநாசல்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

By

Published : Dec 23, 2022, 11:34 AM IST

டெல்லி:பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக இன்ட்ராநாசல் தடுப்பு மருத்தை செலுத்திகொள்ளலாம். முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகள் மூலம் செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை இன்று (டிசம்பர் 23) மாலை முதல் Co-WIN இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த இன்ட்ராநாசல் தடுப்பு மருத்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது. இந்த பரிசோதனை முடிவுகளில் இன்ட்ராநாசல் மருந்து மிகவும் பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்பு சக்தி கொண்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவருவதால், இந்த தடுப்பு மருத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தடுப்பூசியை 2 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். இந்த தடுப்பூசியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் விநியோகிக்கும் உரிமையை பாரத் பயோடெக் நிறுவனம் முன்னதாகவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details