டெல்லி:18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டு, மூன்றாம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இது தொடர்பான ஆய்வுகளும், சோதனைகளும் நாட்டில் உள்ள டெல்லிஎய்ம்ஸ் , பாட்னாஎய்ம்ஸ் , நாக்பூர் மெடிட்ரினா மருத்துக் கல்லூரி போன்ற பல இடங்களில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின்படி, 'கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. அதனை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) விரிவாக பரிசீலித்து அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
கோவாக்சின் விலை என்ன தெரியுமா?
எனினும் மூன்றாம் கட்ட பரிசோதனையை தொடங்குவதற்கு முன்பாக இரண்டாம் கட்ட பரிசோதனை குறித்த இடைக்காலத் தரவுகளை சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்துக்கு சிடிஎஸ்சிஓ நிபந்தனை விதித்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.