தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் - கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Bharat Biotech's Covaxin gets WHO
Bharat Biotech's Covaxin gets WHO

By

Published : Nov 3, 2021, 6:51 PM IST

Updated : Nov 3, 2021, 7:17 PM IST

நியூயார்க்:ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அவசர காலப் பயன்பாடாக செலுத்தப்பட்டுவருகிறது.

இருப்பினும் உலக சுகாதார அமைப்பு இதுவரை அவசர காலப் பயன்பாட்டுக்கு, இந்த தடுப்பூசியை அனுமதிக்காமல் இருந்துவந்தது.

முன்னதாக பாரத் பயோடெக் நிறுவனம், உலக சுகாதார அமைப்பின் அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதலை செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது. இதனிடையே, இருதரப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கிடைத்த அனுமதி

இந்த நிலையில், இன்று(நவ.3) பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலித்து கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி, கரோனா தொற்றுக்கு எதிராக 77.8 விழுக்காடு பலன் தருகிறது என்றும், டெல்டா வகை தொற்றுக்கு எதிராக 65.2 விழுக்காடு பலன் தருகிறது என்றும் பல கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

Last Updated : Nov 3, 2021, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details