தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத் பந்த்; மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட காரணம் என்ன? - மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள்

நாடு தழுவிய போராட்டம் (பாரத் பந்த்) இன்று நடைபெறும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

BHARAT BANDH TODAY: WHY UNIONS ARE PROTESTING AGAINST CENTRE பாரத் பந்த் BHARAT BANDH UNIONS ARE PROTESTING AGAINST CENTRE மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வங்கி
BHARAT BANDH TODAY: WHY UNIONS ARE PROTESTING AGAINST CENTRE பாரத் பந்த் BHARAT BANDH UNIONS ARE PROTESTING AGAINST CENTRE மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வங்கி

By

Published : Dec 8, 2020, 6:01 AM IST

டெல்லி: நாடு தழுவிய போராட்டம் (பாரத் பந்த்) இன்று நடைபெறும் நிலையில், வங்கி சேவைகள் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட், பார்வார்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகளும் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் முக்கிய திருப்பமாக வங்கி தொழிற்சங்கங்களும் தற்போது இணைந்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள காரணம் மற்றும் ஆதரவு அளித்துள்ள தொழிற்சங்கங்கள் குறித்து பார்க்கலாம்.

  1. மத்திய அரசின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை எதிர்த்து பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐ.என்.டி.யூ.சி), ஹிந்த் மஜ்தூர் சபா (எச்.எம்.எஸ்), அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டி.யூ.சி), இந்திய தொழிற்சங்க யூனியன் (சி.ஐ.டி.யூ), தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (டி.யூ.சி.சி), அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க யூனியன் (AIUTUC) மற்றும் சுயதொழில் செய்பவர்கள் சங்கம் முக்கியமானதாகும்.
  2. கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மத்திய அரசும், சில மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ள ‘உழவர் எதிர்ப்புச் சட்டங்கள்’ மற்றும் ‘தொழிலாளர் விரோத’ தொழிலாளர் மசோதாக்கள் மற்றும் சட்டங்களை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் கோருகின்றன. தொழிலாளர் சட்டங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. வணிக நிறுவனங்களின் சுமையைக் குறைக்க சில தொன்மையான சட்டங்களை நான்கு குறியீடுகளாக இணைத்தது. பெருவணிக சமூகம் இந்த நடவடிக்கையை பாராட்டிய போதிலும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர் விரோதம் என்று அழைத்தன. ஏனெனில் இந்தக் குறியீடுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளை பறிக்கின்றன.
  3. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வருமானமற்ற வரி செலுத்தும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்திற்கு ரூ.7,500 ரொக்கமாகவும், ஏழை மக்கள் அனைவருக்கும் மாதத்திற்கு 10 கிலோ இலவச ரேஷனையும் மாற்றுமாறு கோருகின்றன. கோவிட் பெருந்தொற்று பரவலால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
  4. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு ஊரக திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இத்திட்டத்தை 150 நாள்களிலிருந்து 200 நாளாக உயர்த்த வேண்டும் என்றும் இத்திட்டத்தை நகர்புறத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பின் மூலம் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றை ரத்து செய்யவும் தொழிற்சங்கங்கள் விரும்புகின்றன.
  5. வேலைநிறுத்தத்தில் பல வங்கி சங்கங்கள் பங்கேற்பதால் வங்கி சேவைகள் இன்றைய வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படக்கூடும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் சங்கங்களில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை அடங்கும். இதற்கிடையில், ஐடிபிஐ வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகியவை கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணி பாதிக்கப்படலாம் என அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

இதுவே மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட காரணமாகும்.

இதையும் படிங்க : விவசாயிகள்தான் இந்தியாவின் போர் வீரர்கள் - பிரியங்கா சோப்ரா

ABOUT THE AUTHOR

...view details