தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் மனைவிக்கு விவாகரத்து - பெங்களூருவில் லிப்டில் மனைவிக்கு விவாகரத்து

பெங்களூருவில் வரதட்சணை கொடுக்க முடியாத மனைவிக்கு அவரது கணவர் அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து முத்தலாக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

bengaluru-man-divorces-wife-inside-apartment-lift-for-dowry
bengaluru-man-divorces-wife-inside-apartment-lift-for-dowry

By

Published : Jul 29, 2022, 6:49 PM IST

பெங்களூரு:நாடு முழுவதும் வரதட்சணை கொடுமை அதிகரித்துவருகிறது. இதற்காக விவாகரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் வரதட்சணைக்காக அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து பெண்ணுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 லட்சம் வரதட்சணை பெற்று ரேஸ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து மீண்டும் ரூ.10 லட்சம் கேட்டு தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதனால், ரேஸ்மா தனது பெற்றோர் வீட்டு சென்றுள்ளார். இதனிடையே ரம்ஜான் பண்டிகையின் போது ரூ.10 லட்சத்தை பெற்றோரிடம் இருந்து வாங்கிவரும்படி ரேஸ்மாவிடம் போனில் தெரிவித்துவந்துள்ளார்.

ஆனால், ரேஸ்மாவின் பெற்றோரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதையடுத்து முகமது அக்ரம் ரேஸ்மாவை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற ரேஸ்மாவிற்கு அபார்ட்மெண்ட் லிப்டில் வைத்து முத்தலாக் கொடுத்துள்ளார். இதனால் ரேஸ்மா சுட்டுகுண்டேபாளைய காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:முத்தலாக் கூறிய கணவர் மீது புகார் அளித்த மனைவி!

ABOUT THE AUTHOR

...view details